எங்கள் நாடு, எங்கள் கைகளில்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்!

எங்கள் நாடு, எங்கள் கைகளில்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம்!

இம்முறை சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம், ‘எங்கள் நாடு, எங்கள் கைகளில்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

இந்த தொனிப்பொருளில், ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியன்று சர்வதேச சிறுவர் தினத்தை, பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, பாடசாலைகளிலும் கொண்டாடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீகே பெரேரோ இதுகுறித்த அறித்தலை வெளியிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி விடுமுறை தினமாகவிருப்பதால், பாடசாலைகளில் ஒக்டோபர் 2ஆம், 5ஆம் திகதிகளில் இந்நிகழ்வுகளை, சுகாதார நடைமுறை விதிகளுக்கமைவாக நடத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் தின தொனிப்பொருள் அடங்கிய பதாதைகளைக் காட்சிப்படுத்தல், கொரோனா வைரஸ் பாதுகாப்புத் தொடர்பிலும் தொனிப்பொருளுக்கமைவாக மாணவர் மத்தியில் அவர்களது ஆக்கத்திறன், அழகியல்திறன்களை மேம்படுத்துமுகமாக  குறுநாடகம், வாத்திய இசை, பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.

மேலும், பாடசாலைச் சிறுவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாத்தல் தொடர்பிலும் ஆரோக்கியமான உணவுகளை உள்ளெடுத்தல் தொடர்பிலும் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.