பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

பிரான்ஸில் இரண்டாவது கொவிட்-19 தொற்று அலை ஆரம்பித்துள்ள நிலையில், நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 16ஆயிரத்து 96பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 52பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை நான்கு இலட்சத்து 97ஆயிரத்து 237பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31ஆயிரத்து 511பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை மூன்று இலட்சத்து 71ஆயிரத்து 313பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1048பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 94ஆயிரத்து 413பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.