அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது! பெசெஷ்கியான் எடுத்துரைப்பு

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது! பெசெஷ்கியான் எடுத்துரைப்பு

போரை இப்போது முடிவுக்குக் கொண்டுவருவது சிறந்தது. ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் என  ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் நாம் தற்போது வலிமையுடனும் கண்ணியத்துடனும் இருக்கிறோம் எனக் குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதும் ஈரானின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பல தசாப்தங்களாக எதிரிகளாக இருந்து வரும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில், இரு தரப்பினரும் போர் நிலைமையில் தேக்கநிலையை எதிர்கொண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் பெசெஷ்கியன் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

 

புரிந்துணர்வு உடன்பாடு தோல்வி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போருக்கு முடிவு காணும் நோக்கில் ஜூன் மாதம் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டியதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது! பெசெஷ்கியான் எடுத்துரைப்பு | Time To End The War With America

மேலும், ஜூன் மாதம் அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட போர் முடிவுக்கான புரிந்துணர்வு உடன்பாடு ஈரானின் தோல்வியை பிரதிபலிப்பதாகக் கூறப்படுவதை பெசெஷ்கியான் மீண்டும் நிராகரித்துள்ளார்.

இந்த உடன்பாட்டில் ஈரான் சரணடைந்ததைக் காட்டும் ஒரு விதியைக் கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியாது.

அனைத்து பொறுப்புகளும் மறுதரப்பினருக்கே விதிக்கப்பட்டுள்ளன,” என தெரிவித்த அவர்,  ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியும், தமக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறியுள்ளார்.