எஸ்பிபி-ஐ பார்க்க மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்: வைரலாகும் வீடியோ

எஸ்பிபி-ஐ பார்க்க மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்: வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனா நோயிலிருந்து குணம் ஆனாலும் நுரையீரல் பிரச்சனை காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக அவரது உடல் சீராக இருப்பதாகவும் நல்ல முறையில் உடல் நலம் தேறி வந்ததாகவும் செய்திகள் வெளி வந்ததால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் சற்று முன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும் உலக நாயகன் நடிகருமான கமலஹாசன் எஸ்பிபி-ஐ பார்ப்பதற்காக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை பற்றி விசாரிக்க, நடிகர் கமல்ஹாசன் சென்னை சூளைமேடு எம் ஜி எம் ஆஸ்பத்திரி வருகை @maiamofficial @ikamalhaasan pic.twitter.com/7zkoPY0FS6

— meenakshisundaram (@meenakshicinema) September 24, 2020