ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த உத்தரவு

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த உத்தரவு

ஆளுங்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மேற்பார்வைக் துறைசார் மேற்பார்வைக் குழு முறைமையை இல்லாதொழித்து அதற்கு பதிலாக நாடாளுமன்ற ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்குவதற்காக முன்மொழிவு செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமரா அவர் திசைக்கு திரும்பியிருக்கவில்லை.

இதனையடுத்து குறித்த சம்பவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அங்கு சற்று பரபரப்பான நிலை ஏற்பட்டது.