மறைந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மறைந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்று இருப்பவர். இவரது நடிப்பு திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டுவது உண்டு. ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்பு ஒரு டான்ஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். 

 

அதன் பின் சினிமாவில் நுழைந்து அவர் படிப்படியாக தன்னுடைய நடிப்பின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். காக்கா முட்டை படத்தில் அவரது நடிப்பு அதிகம் பாராட்டுகளை அவருக்கு பெற்றுத் தந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு போனது. தற்போது அவர் பல படங்களில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த மனோரமாவை ஆச்சி என ரசிகர்கள் அழைப்பதுண்டு. அவர் 2015ல் உடல்நல குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.