மஞ்சள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மஞ்சள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் சிறிய ரக பாரவூர்தி ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 206 கிலோகிராம் மஞ்சள், மதவாச்சி - மன்னார் வீதிப் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதவாச்சி - மன்னார் வீதியின் 543 ஆவது படைப்பிரிவு, வீதித் தடையில் வைத்து, நேற்றைய தினம் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம், மன்னார் - குஞ்சுக்குளம் வீதித் தடையில், 21 மில்லியன் ரூபா பெறுமதியான, 104 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.