நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும், அமெரிக்காவிலிருந்து இருந்து நாடுதிரும்பிய இரண்டு பேருக்கும் எத்தியோப்பியா மற்றும் ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவருக்கும் கொவிட் -19 தொற்றுக்குள்ளாது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.

182 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.