
மீண்டும் பாரிய வெடிப்பு சம்பவம்! அரச ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்
லெபனானின் தலைநகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெற்கு லெபனானில் நேற்றைய தினம் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்கில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள கிராமமான ஐன் கானாவிலேயே வெடிப்பு நிகழ்ந்துள்ளது என லெபனானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான என்.என்.ஏ. அறிவித்துள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வெடிப்பு சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாகவும், பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் வெடிப்பு சம்பவத்தில் ஏதும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.