இதெல்லாம் ஒரு சவாலா?... ஸ்ருதிஹாசன் ஆதங்கம்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், இதெல்லாம் ஒரு சவாலா என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட் பண்ணணும், யார்கிட்டயாவது பேசிக்கிட்டே இருக்கணும்... இப்படி நமக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். தனியா இருக்கிறதுல சிலருக்கு பயம் இருக்கு. ஆனா, பல வருடங்களாக நான் தனியாக வாழ்ந்து பழகினவள். 

 

சென்னை வந்தா அப்பாவை மீட் பண்ணுவேன். ஆனாலும், தனியாதான் இருப்பேன். தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தனியா இருந்தா போரடிக்கும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கு. உங்களுக்கு நீங்களே போரடிக்கிறீங்கன்னா, மத்தவங்களுக்கும் அப்படித்தானே இருப்பீங்க. 

சமையல், வீட்டைச் சுத்தம் பண்றது, துணி துவைக்கிறதுனு எல்லா வேலைகளையும் நான்தான் பண்றேன். ‘பிரபலங்கள் எல்லாம்  பாத்திரம் தேய்ப்பாங்களா’னு யாராவது கேட்டா ஆச்சர்யமா இருக்கு. லண்டன்ல இருந்தவரை குப்பையை வெளியில கொண்டுபோய் கொட்டறதுவரை நான்தான் பண்ணியிருக்கேன்.

வீடு சுத்தமா இல்லைனா எனக்கு மூளை வேலை செய்யாது. ஊரடங்கு தொடங்கியபோது நிறைய பேர் என்கிட்ட பாத்திரம் கழுவற சவாலில் சேரச் சொல்லிக் கேட்டாங்க. பாத்திரம் கழுவறதும் வீட்டைப் பெருக்கிறதும் சவால் கிடையாது. வீட்டை சுத்தமா வெச்சிருக்கிறது உங்க பொறுப்பு. இப்படியே போனா பல்லு தேய்க்கிற சவால் வந்தாலும் ஆச்சர்யமில்லை’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.