அட்லீ படத்தில் ஷாருக்கானுக்கு இரட்டை வேடம்?

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான், அடுத்ததாக அட்லீ இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள அட்லீ, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியாக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ஷாருக்கான் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.