சவூதி அரேபியா தேசிய நாள்: 23-9-1932

1932-ம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப்பெரிய நாடாகும். வடமேற்கு எல்லையில் ஜோர்டானும் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கத்தார், பக்ரைன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் ஏமனும் அமந்துள்ளது.

மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்- நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932-ம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1868 - புவெர்ட்டோ ரிக்கோவில் ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது. * 1884 - ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார். * 1889 - நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. * 1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன. * 1965 - இந்திய- பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது. * 1966 - நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது. * 1980 - பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். * 1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற்கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர். * 1986 - இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. * 2002 - மோசிலா பயர் பாக்ஸ் இணைய உலாவி வெளிவந்தது. * 2004 - எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரத்து 70 பேர் கொல்லப்பட்டனர்.