நானா... ஆச்சர்யப்பட்டேன் என்கிறார் 30 பந்தில் 51 ரன் விளாசிய டி வில்லியர்ஸ்

முதல் போட்டியிலேயே இப்படி ஃபார்முக்கு வருவேன் என நினைக்கவில்லை என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்த போதிலும் ஆரோன் பிஞ்ச் மற்றும் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆர்சிபி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

 

ஆனால், டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 51 ரன்கள் சேர்த்ததால் ஆர்சிபி அணியால் 163 ரன்கள் சேர்க்க முடிந்தது.

முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘உண்மையை சொல்லப்போனால் எனக்கு நானே ஆச்சர்யப்பட்டுக் கொண்டேன். நாங்கள் தென்ஆப்பிரிக்காவில் போட்டி விளையாட்டில் ஆடியது சிறப்பான விசயம்.

நான் இங்கு வரும்போது கொஞ்சம் நம்பிக்கைதான் இருந்தது. இந்த நேரத்தில் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடியது எனக்கு முக்கியமான விசயம். இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான திறமையான வீர்ர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களும் உள்ளனர். போட்டியில் ஜோஷ் பிலிப்பை பார்க்கும்போது, அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

 

இங்கு வருவதற்கு முன் அதிகமாக போட்டிகளில் விளையாடவில்லை என்பதால், உங்களுக்குள்ளேயே அதிக சந்தேகம் இருக்கும். அணியுடன் இணைந்து கடந்த நான்கு வாரங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டு, தனக்குத்தானே சிறந்த பார்மை பெற்றுள்ளேன். மகிழ்ச்சியான தொடக்கம் கிடைத்தது. துரதிருஷ்டவசமாக கடைசி நேரத்தில் ரன்அவுட் ஆகிவிட்டேன்’’ என்றார்.