பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஜித், கேப்ரில்லா ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய பாடகருமான வேல்முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.
’சுப்பிரமணியபுரம்’ படத்தில் இடம்பெற்ற ’மதுர குலுங்க குலுங்க’ ’நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ’ஆடுங்கடா’ ’ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஒத்த சொல்லால’ உள்பட பல கிராமிய திரைப்பாடல்கள் பாடி இசை ரசிகர்களை கவர்ந்தவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.