தல 61 படத்தின் மூலம் அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா என்பது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிடம் அஜித் - சுதா கொங்கரா மூவி நடக்குமா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், “செம்ம ஸ்கிரிப்ட் அது. நடந்ததுனா செம்மையா இருக்கும். முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் அது. சுதா அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட சொல்லிருக்காங்க. அது நடந்தால் நல்லாயிருக்கும்” என தெரிவித்துள்ளார்.