பாட்டலி சம்பிக்க வழக்கு- முன்னாள் பொறுப்பதிகாரிக்கு பிணை
வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய தற்போதைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் இவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் வாகன விபத்து சம்பந்தமாக போலி சாட்சியங்களை உருவுாக்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே அப்போது வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடலவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவுக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.