குவாதமாலா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!

குவாதமாலா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!

லத்தீன் அமெரிக்க நாடான குவாதமாலாவின் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டீ (Alejandro Giammattei) மற்றும் கலாசார அமைச்சர் லிடியட் சில்வானா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தனக்கு, நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் வானொலியான சோனோராவில் கியாமட்டீ தெரிவித்தார்.

இந்நிலையில், அதிக காய்ச்சல் மற்றும் உடல்வலிகள் போன்ற அறிகுறிகள் உள்ளதாகவும் குவாதமாலா நகரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்ட சென்ட்ரோ மெடிகோ மிலிட்டரில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குவாதமாலாவில் இதுவரை 84 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.