சாதனை நாயகன் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

சாதனை நாயகன் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரங்கன ஹேரத் இலங்கை அணியின் சுழல் (ஸ்பின்) பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சுற்றுப் போட்டிகளில் இவர் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த மாதம் 3 டெஸ்ட் போட்டித் தொடருக்காக பங்களாதேஷ் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜனவரி மாதம் 2 டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த போட்டிகளுக்கு அவர் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.

இடது கை பந்து வீச்சு சாதனையாளரான ரங்கன , 2018 இல் 433 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.