விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருவார்.

 

இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் அடிக்கடி கிசுகிசுக்கப்படும். 

 

சமீபத்தில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஓணம் பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட கேரளா பறந்த இவர்கள், அங்கிருந்து கோவா சென்றனர். அங்கு நயன்தாராவின் தாயார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு அதற்கான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார் விக்னேஷ் சிவன்.

 

இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் கோவாவில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு கேக், அலங்காரம் செய்யப்பட்ட அறை, இசை, பாடல் என சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் நயன்தாரா. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்துள்ளார்.