தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரியை ஸ்ரீலங்கா அரசாங்கம் ரத்துச் செய்துள்ள போதிலும், தங்க நகைகளின் விலை குறைவடையும் என எதிர்ப்பார்க்க முடியாதென கொழும்பு - செட்டியார் தெரு தங்கநகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்க நகைகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களின் வருகை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கும் நகை கடை விற்பனையாளர்கள், தங்கத்திற்கான நிரந்தர விலையொன்று கொண்டுவரப்படும் பட்சத்தில் அனைவராலும் நன்மையடைய முடியும் என கூறுகின்றனர்.

ஸ்ரீலங்காவில் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரியை ரத்துச் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அறிவிப்பை விடுத்தது.

அரசாங்கத்தின் அறிவிப்பையடுத்து தங்கத்தின் விலையை - பவுனுக்கு 15 ஆயிரம் ரூபா வரை குறைக்க வேண்டிய நிலைக்கு தங்க விற்பனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பான சாதக - பாதக தன்மைகள் குறித்து கொழும்பு - செட்டியார் தெரு நகை விற்பனையாளர்கள் சிலரிடம் ஐ.பி.சி. தமிழ் வினவியது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்கள்,

தங்க இறக்குமதிக்கான வரி இரத்து செய்யப்பட்டமை அதிகளவு பாதிப்பு இல்லை.

தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக நம்பிக்கை கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதிகளவு நகைகளை கொள்வனவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், வரி இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் தங்கநகை விற்பனையாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.