“சைலன்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

“சைலன்ஸ்” திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள சைலன்ஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் குறித்த திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி  இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அனுஷ்கா மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.

இதேவேளை அதே தினத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கஃபே ரணசிங்கம்” திரைப்படமும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.