வட மாகாணத்திற்குள் நுழைந்த மாவத்தகமவில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள்

வட மாகாணத்திற்குள் நுழைந்த மாவத்தகமவில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள்

மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட விளைச்சல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளி தற்போது வட மாகாணத்திற்கு பரவியுள்ளது. விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.எம்.டப்ளிவ் வீரகோன் இதனை தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்  விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.எம்.டப்ளிவ் வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுசம்பந்தமாக வட மாகாண விவசாய திணைக்களத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த நிலவரம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.அதேநேரத்தில் வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக கருதுகின்ற நிலைமையும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இது சம்பந்தமாக விரிவான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.