ஓரினச்சேர்க்கையை ஒரு குற்றமாக சட்டப்பூர்வமாக்கும் எண்ணம் இல்லை?

ஓரினச்சேர்க்கையை ஒரு குற்றமாக சட்டப்பூர்வமாக்கும் எண்ணம் இல்லை?

இலங்கையில் ஓரினச்சேர்க்கையை ஒரு கிரிமினல் குற்றமாக சட்டப்பூர்வமாக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பதிரன இதை தெரிவித்தார்.

இது தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை பெற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதை தெரிவித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.