இனி கடவுச்சீட்டுக்கள் அரச அச்சகத்தில் மாத்திரம் அச்சிடப்படும்

இனி கடவுச்சீட்டுக்கள் அரச அச்சகத்தில் மாத்திரம் அச்சிடப்படும்

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள், அரச ஆவணங்கள் ஆகியவற்றை அரச அச்சகத்தில் மாத்திரம் அச்சிடுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிடும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இராணுவத்தினர் முன்னெடுக்கப்படவுள்ளனர். தனியார் நிறுவத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றது. இது தொடரிபில் இராணுவ தளபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.