ஊருக்குள் புகுந்தது விச நரி -களுத்துறை மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை -தனியே நடமாடவேண்டாமென அறிவிப்பு
களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களை விசத்தன்மை வாய்ந்த நரியொன்று துரத்தி கடிப்பதால் அந்த மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. .
வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த நரியொன்றே இந்த தாக்குதலை மேற்கொள்வதாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
விசர் நரி கடிக்கு உள்ளாகி இதுவரை இருவர் பலியானதுடன், கால்நடைகளும் உயிரிழந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தனியே எந்த பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை தனியே கண்டால் துரத்தி கடித்துவிடுவதாகவும், இரவு நேரங்களில் மக்கள் நடமாட வேண்டாம் என்றும் அந்த பிரதேச மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.