சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3174 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 22 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 215 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேநேரம், இன்றும் நேற்றும் இலங்கையில் ஒருவரும் கொவிட்19 நோய்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.