வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக எதிர்காலத்தில் நலன்புரி சேவைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே இதற்கு அவசியமான உண்மையான தகவல்கள்  பெறும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேணப்படும் எனவும் வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என உறுதி அளிப்பதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.