நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் இந்த மேன்முறையீடுகள் விசேட குழுவினால் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை அரச சேவையின் பதவி வெற்றிடங்களுக்கு உள்வாங்கப்படவுள்ள பயிலுனர் பட்டதாரிகள் 50,000 பேருக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீடுகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 10,000 அரச சேவை பதவிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளை அமைச்சில் சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேன்முறையீடுகளை ஆராயும் நடவடிக்கையை இரண்டு வாரங்களில் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.