ஸ்ரீலங்கா அரசுக்கு நாட்டம் இல்லை - பகிரங்கப்படுத்திய சர்வேஸ்வரன்
தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நாட்டம் இல்லை என வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
வடமாகாண சபை மீதான பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வரும் தரப்பினர் அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் காரணமாகவே மாகாண சபைகளை நீக்குவதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முனைகிறார்கள்.
மாகாணசபை முறைமையை ஆதரிக்கும் இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் எதிர்ப்பு வெளியிட கூடாது என்பதற்காகவே, வினைத்திறன் அற்ற சபையாக வடக்கு மாகாணசபையை காட்ட அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.