பிரதமரிடம் இருந்து பொது மக்களுக்கு ஓர் நற்செய்தி

பிரதமரிடம் இருந்து பொது மக்களுக்கு ஓர் நற்செய்தி

தேசிய தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் முகமாக சில தளரான கொள்கைகளின் கீழ் கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை தியத உயன வளாகத்தில் இடம்பெற்ற தேசிய தொழிலதிபர்களின் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஷில்ப தர்ஸ்டே எனப்படும் கைவினைப் பொருட்களுக்கான சந்தையை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் தியத உயன வளாகத்தில் நடத்துவதற்கு கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் விற்பனை சந்தை இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.