
கதிரியக்க பரிசோதனை அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கதிரியக்க பரிசோதனை அதிகாரிகள், இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிர்வாக பிரச்சினையை முன்வைத்து, இன்று காலை முதல் அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கதிரியக்க பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கதிரியக்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.