அவுஸ்திரேலிய இங்கிலாந்து ஒருநாள் தொடர்- தீர்மானமிக்க போட்டி இன்று

அவுஸ்திரேலிய இங்கிலாந்து ஒருநாள் தொடர்- தீர்மானமிக்க போட்டி இன்று

சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான் மூன்று போட்டிகள் கொண்ட, ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரில், நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்றைய மூன்றாவதும் இறுதியுமான போட்டி, மென்செஸ்டரில் இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, மாலை 5.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.