ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்

யோஷிஹைட் சுகா நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஜப்பானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜப்பானிய ஆளும் கட்சியின் தலைவரான 71 வயதான சுகா, கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பது, பொருளாதார புத்துயிர் மற்றும் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த டோக்கியோவுக்கு வழி வகுத்தல் போன்ற உடனடி சவால்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

தனது இறுதி அமைச்சரவைக் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன் பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஷின்சோ அபே, தாம் ஆட்சிக்கு திரும்பியதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஜப்பானின் தேசிய நலனைப் பாதுகாப்பதற்காக பொருளாதார மீட்சி மற்றும் இராஜதந்திரத்திற்காக தானது உடலையும் ஆன்மாவையும் அர்ப்பணித்ததாக கூறியிருந்தார்.