மேலும் 654 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மேலும் 654 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 656 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 371 இலங்கையர்கள் இன்று(புதன்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் ஜோர்தானின், அம்மானிலிருந்து 285 இலங்கையர்கள் நேற்றிரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.