இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கலந்துரையாடல்
மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வீடமைப்பு திட்டம் தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு உட்பட்ட அதிகாரிகளுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகள் என்பவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்தில், வீட்டின் கூரைக்கு பதிலாக கொங்கிரீட் சிலப் முறையிலான கூரை அமைப்பது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.