எண்ணெய்க்கசிவு உறுதிபடுத்தப்பட்டுள்ளது...

எண்ணெய்க்கசிவு உறுதிபடுத்தப்பட்டுள்ளது...

இரண்டு தடவைகள் தீ விபத்துக்கு உள்ளான எம்.ரி நிவ் டயமன்ட் கப்பலில் இருந்து கனமான எரிபொருள் எண்ணெய் கடலில் கசிவடைந்துள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, எம்.ரீ. நிவ் டயமன்ட் கப்பலின் இயந்திர அறை மற்றும் கப்பலின் உள்ளக பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட எரிப்பொருள் மாதிரிகளை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டேர்னி பிரதிப்குமார இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய நேற்றைய தினம் கப்பலுக்குள் நுழைந்த குறித்த குழுவினர் எரிப்பொருள் மாதிரிகளை பெற்றுக்கொண்டனர்.

கப்பல் தீப்பற்றிய பின்னர் அந்த கடற்பகுதியில் எண்ணெய் படிமம் படர்ந்ததுடன், கடல்நீரை பரிசோதனை செய்வதற்கு கடற்பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அந்த அறிக்கை இன்று அல்லது நாளைய தினம் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் என கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டேர்னி பிரதிப்குமார குறிப்பிட்டுள்ளார்.