விவசாயத்துறை அமைச்சர் இன்று யாழிற்கு விஜயம்..!

விவசாயத்துறை அமைச்சர் இன்று யாழிற்கு விஜயம்..!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர், இன்றையதினம் வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே அமைச்சர் இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய, யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அச்செழு பகுதியில் இன்று காலை திராட்சை அறுவடை நிகழ்வில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விஜயத்தில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சஷிந்திர ராஜபக்‌ஷ, டி.பி. ஹேரத் மற்றும் மொஹான் டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, கால்நடை வளர்ப்பு, வாழை மற்றும் கிழங்கு பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராய்வதற்காக நீர்வெலி மற்றும் அச்சுவேலி ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.