இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?
நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் 19 தடுப்பு மையத்தினால் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,920 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 11 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 3,005 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 6,142 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,262ஆக பதிவாகியுள்ளது.
மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 244 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.