முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி சாரதிகளுக்கு பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ள விடயம்
நாளை முதல் முச்சக்கரவண்டிகள் மற்றும் உந்துருளிகள் ஆகியன பேருந்து ஒழுங்கையில் மாத்திரமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் பேருந்துகளுக்கு மாத்திரம் தனியொரு ஒழுங்கை நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, கொழும்பின் பிரதான 4 நகரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வீதி ஒழுங்கை நடைமுறை இன்று இரண்டாவது நாளாகவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பேஸ்லைன் வீதியின் புதிய களனி பாலத்தில் இருந்து ஒருகொடவத்தை, தெமட்டகொட, பொரளை நாரஹேன்பிட்டி ஊடாக ஹைலெவல் சந்திவரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தையின் பொல்துவ சந்தியில் இருந்து ராஜகிரிய மேம்பாலம், ஆயர்வேத சுற்றுவட்டம், டி.எஸ் சேனாநாயக்க சந்தி, ஹொர்ட்டன் சுற்றுவட்டம், நுலக சந்தி, லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையில் இந்த வீதி ஒழுங்கை நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, காலி வீதியின் வில்லியம் சந்தியில் இருந்து டிக்மன் சந்தி, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் சுற்றுவட்டம், என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரையிலும், அனுலா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து ஹைலெவல் வீதி, பேஸ்லைன் சந்தி, பார்க்வீதி, திம்பிரிகஸ்ஸாய சந்தி, தும்முல்ல சுற்றுவட்டம், பித்தளை சந்தி வரையிலும் இந்த வீதி ஒழுங்கை நடைமுறை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.