மஹிந்தவும் கோட்டாபயவும் தீர்மானிப்பார்கள்! உதய கம்மன்பில தகவல்
உத்தேச 20வது திருத்தத்தின் நகல்வடிவில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தீர்மானிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச 20வது திருத்தத்தின் நகல்வடிவம் குறித்து ஆராய்வதற்காக 9பேர் கொண்ட குழு ஒன்று நிறுவப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அதன் உறுப்பினர்களான அமைச்சர்கள் விமல் வீரவன்சவும் உதய கம்மன் பிலவும் 20ஆவது திருத்தத்தின் நகல்வடிவில் பல முரண்பாடுகள் இருப்பதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நகல்வடிவம் குறித்த கரிசனைகளை ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நகல்வடிவில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானிப்பார்கள் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் அனைத்துவிடயங்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் விமல்வீரவன்ச அனைத்து பரிந்துரைகளும் அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆளும் அமைப்பு தொடர்பான விடயங்களுக்கு தீர்வை காண்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் வெளிச்சக்திகள் ஆட்சி விவகாரங்களில் தலையிட அனுமதிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.