லக்கல பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட எட்டு பேர் கைது

லக்கல பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட எட்டு பேர் கைது

காலி பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்கல - வெல்லேவெல பகுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கைதானவர்களில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஒருவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களிடம் இருந்து ஒரு கிராம் 120 மில்லிகிராம் அடங்கிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.