பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பதுளையில் 50 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை நேற்றைய தினம் (14) பதுளை நீதவான் சமிந்த கருணதாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் 30 வயதான பதுளை - கட்டுபெலெல்லகம பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய ஹாலிஎல காவல்துறையின் போக்குவரத்து பிரிவினர் நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளை பொலித்தீன் பைகளில் பொதி செய்து தமது காலின் தொடை பகுதியில் போதைப்பொருளை மறைத்து வைத்து கொழும்பில் இருந்து பதுளைக்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.