இரண்டாவது நாளாக அமுல்படுத்தப்பட்டுள்ள பேருந்து ஒழுங்கை நடைமுறை
கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களில் பேருந்து ஒழுங்கை நடைமுறை இன்றைய தினமும் (15) அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று காலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் பிரதான நான்கு வீதிகளை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, காலிவீதி , ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர முதல் கோட்டே வரையான வீதிகளில் இன்று முதல் பேருந்து ஒழுங்கை நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.