சட்டமா அதிபர் மற்றும் நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரின் சட்டத்தரணி இடையே சந்திப்பு
தீப்பற்றிய எம்.ரீ. நிவ் டயமன்ட் கப்பலின் உரிமையாளரின் சட்டத்தரணி சட்டமா அதிபர் தப்புல டி லிவேறாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தீப்பற்றிய கப்பலின் சட்ட சிக்கல்கள் மற்றும் அரசாங்கத்தின் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நிவ் டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கையினால் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான முழுமையான செலவீனத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைளை எடுக்கவுள்ளதாக கடற்பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கடற்பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் தர்ஷினி தலஹதம்புர தெரிவித்துள்ளார்.