பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை

பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை

உத்தேச அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டமூல வரைவு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள 9 பேர் அடங்கிய குழுவின் அறிக்கை இன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரதமரால் நியமிக்கப்பட்ட குறித்த குழு நேற்றைய தினம் கூடிய நிலையில் உத்தேச 20 வது திருத்தச்சட்ட வரைவு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பல்வேறு கருத்துக்கள் குறித்தும் ஆராய்ந்திருந்தன.

இந்தநிலையில் அந்த அறிக்கையினை பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உத்தேச 20 வது திருத்தச்சட்ட வரைவு தொடர்பில் ஆராய்வதற்கு நேற்றைய தினம் கூடியிருந்தனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவர்களின் நிலைப்பாட்டினை எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்