காணிப்பிரச்சினையில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சி...!
தெனியாய ஹென்பர்ட் தோட்டத்தில் இடம்பெற்ற காணி தகராறு காரணமாக பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டில் பெண்கள் இருவர் வசித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 வருடங்களாக அவர்கள் குறித்த காணியில் வசித்து வருகின்றனர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவர்கள் தங்களது வீட்டிற்கு மின்சாரத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு, கடந்த 2016 ஆம் ஆண்டு சிலரால் தங்களது வீடு உடைக்கப்பட்டதாகவும் பின்னர் காவல் துறையினர் தலையீட்டுடன் மீண்டும் வீட்டினை செய்துக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த பெண்கள் காணியின் ஒரு பகுதிக்கு வரி செலுத்தியுள்ளதோடு, இடப்பிரச்சினை தொடர்பில் மொரவக்க நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பில் அவர்கள் தெனியாய காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஏற்பட்ட வாய்தர்க்கம் பின்னர் தாக்குதலில் நிறைவடைந்தமை தொடர்பிலான காணொளியும் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது.