இலங்கையில் நேற்று மட்டும் 2,201 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன
கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளைக் கண்டறிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 2,201 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,234 ஆக அதிகரித்துள்ளதுடன் நேற்று மட்டும் 39 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் நாட்டில் இதுவரை 256,043 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை முப் படையினரால் பராமரிக்கப்படும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 150 பேர் இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரை 40,965 பேர் வெளியேறியுள்ள நிலையில் 5,960 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.