குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் சட்டமா அதிபர் ஆட்சேபனை

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் சட்டமா அதிபர் ஆட்சேபனை

குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்ட்டுள்ள இடைக்கால தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றதில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, சட்டமா அதிபரின் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை நவம்பர் 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மனு மீதான விசாரணைகளுடன் குறித்த தினத்தில் ஆரம்பிப்பதற்கு நீதியரசர் குழாம் தீர்மானித்துள்ளது.