பேருந்து ஒழுங்கை நடைமுறை வெற்றியளித்ததா..?
கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களில் பேருந்து ஒழுங்கை நடைமுறை இன்று (14) முதல் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று காலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் பிரதான நான்கு வீதிகளை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் அதனைய அண்டிய நகரங்களில் இன்று முதல் அமுலான ஒழுங்கை சட்டத்தால் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து கோட்டை திசை நோக்கிய வீதியிலும் டி.எஸ்.சேனாநாயக்க சந்தியை அண்மித்த பகதிகளிலும் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக போக்குவரத்து காவல்துறையினர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தனர்.
அத்துடன் பேலியகொடை மற்றும் களனி பாலம் அண்மித்த பகுதிகளில் கொழும்பு கண்டி வீதியிலம் நுகேகொடை முதல் ஹைய்லெவல் வீதியிலும் ஒழுங்கை சட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
தெஹிவளை மற்றும் கொஹூவல முதல் காலி வீதிக்கு நுழையும் வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதிக்கு மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்கள் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.