நியூ டயமன்ட் கப்பலை நோக்கி பயணித்த கடல் பாதுகாப்பு அதிகாரசபையின் நிபுணர் குழு

நியூ டயமன்ட் கப்பலை நோக்கி பயணித்த கடல் பாதுகாப்பு அதிகாரசபையின் நிபுணர் குழு

தீ பற்றிய எம்.டி.நியூ டயமன்ட் கப்பலில் உள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்வதற்காக கடல் பாதுகாப்பு அதிகாரசபையின் நிபுணர் குழுவொன்று இன்று அந்த கப்பலுக்கு சென்றுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கடற்படையின் உதவியுடன் நிபுணர் குழு கப்பலுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலின் எண்ணெய் மாதிரியை பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, கடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உத்தரவிட்டிருந்தமைக்கு அமைய அந்த அதிகாரசபையின் நிபுணர் குழு தீ பற்றிய எம்.டி.நியூ டயமன்ட் கப்பலுக்கு சென்றுள்ளது.

தற்போது கிழக்கு கடற்பரப்பில் இருந்து 51 கடல் மைல் தொலைவில் உள்ள குறித்த கப்பலின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தற்சமயம் சட்டமா அதிபரின் தலைமையில் இடம்பெற்று வருகிறது.

கப்பல் தொடர்பான நடவடிக்கையில் இணைந்துள்ள அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாக கடல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.